07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு - tamilmazlar
Responsive Ads Here

07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு

 07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு 


வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது . வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot