வினாத்தாட்கள் விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் முன்கூட்டியே வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை - tamilmazlar
Responsive Ads Here

வினாத்தாட்கள் விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் முன்கூட்டியே வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

வினாத்தாட்கள் விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் முன்கூட்டியே வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை.


ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு 08042025 முதல் 24 : 04.2025 வரை அட்டவணையில் குறிப்பிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது . நடப்புக் கல்வியாண்டில் டிசம்பர் மாதம் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றபோது ஒரு சில மாவட்டங்களில் தேர்வு வினாத்தாட்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் ஆசிரியர்களின் வழியாக பொதுவெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவ்வாசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது . எனவே , 08042025 முதல் 2404-2025 வரை நடைபெற உள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுக்குரிய வினாத்தாட்களை பள்ளியின் EMIS உள்நுழைவின் வழியாக சென்று பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாட்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக EMIS உள்நுழைவில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர் எண்ணிக்கை / பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வினாத்தாட்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாத வகையில் கவனத்துடன் செயல்பட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கட்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இனிவரும் காலங்களில் வினாத்தாட்கள் கசிவு முன்கூட்டியே வெளியானால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் / பிற ஆசிரியர்கள் அவ்வொன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த வட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி நுறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது எனவே தேர்வு பணிகளில் கணக்கம் இல்லாமல் கவனமாக செயல்பட தேவையான அறியுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( நொடக்கக் கல்வி வழங்குவதோடு ஆண்டு இறுதித் தேர்வினை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DEE Proceedings - Download her

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot